உலக செய்திகள்

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் - இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார் + "||" + UK Prime Minister apologizes for delay in Brexit

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் - இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் - இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.
லண்டன்,

28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.


ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்றுவதில் இன்னும் இழுபறி நிலை உள்ளது.

இந்த விவகாரத்தில் டேவிட் கேமரூன், தெரசா மே என 2 பிரதமர்கள் பதவி விலகியது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து கடந்த மாதம் 31-ந் தேதி விலகுவதற்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியாக இருந்தார்.

அக்டோபர் 31-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடியாமல் தாமதம் ஏற்பட்டால் சாக்கடை குழியில் விழுந்து சாவேன் என்று அவர் ஆவேசமாக குறிப்பிட்டார்.

ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வெளியேற வேண்டும், அக்டோபர் 31 என்ற கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றம் கூறியது.

அதைத் தொடர்ந்து கெடுவை ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை நீட்டிப்பதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு சம்மதம் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து மக்களின் உத்தரவை பெறுகிற நோக்கத்தில் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்தார். இது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது.

டிசம்பர் 12-ந் தேதி அங்கு தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை மேற்கொள்வதில் ஏற்பட்ட கால தாமதத்துக்காக நாட்டு மக்களிடம் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

இது தொடர்பாக நேற்று அவர் அளித்த ஒரு பேட்டியில், “ ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து அக்டோபர் 31-ந் தேதிக்குள் வெளியேற முடியாமல் போய் விட்டது. இது மிகுந்த ஏமாற்றத்துக்கு என்னை ஆளாக்கி உள்ளது” என்று கூறினார்.

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை விவகாரத்தில் போரிஸ் ஜான்சனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் விமர்சித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “பிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் ஐரோப்பிய கூட்டமைப்புடன் போட்ட ஒப்பந்தம், எதிர்காலத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை பாதிக்கும்” என கூறினார்.

இதற்கு போரிஸ் ஜான்சன் பதில் அளிக்கையில், “ ஜனாதிபதி டிரம்பின் எந்தவிதமான அவமதிப்பையும் தெரிவிக்கவிரும்பவில்லை. அதே நேரத்தில் அவர் மிகவும் பிழையாக கூறுகிறார். நமது ஒப்பந்தத்தை பார்க்கிற யாரும் அது மிகப்பெரிய ஒப்பந்தம் என்பதை உணர முடியும்” என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவ மழை- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒரு மாதத்திற்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரப்போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. சிவகாசி நகரின் மையப்பகுதியில் பாலம் அமைக்கும் பணி தாமதம்; பள்ளி மாணவர்கள் அவதி
சிவகாசி நகராட்சி பகுதியில் பாலம் அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
3. மாட்டுத்தாவணியில் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தாமதம்: பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாட்டுத்தாவணியில் கண்மாய் இடத்தை ஆக்கிரமித்து ஓட்டல் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் வருகிற 22-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. தஞ்சை அருகே என்ஜின் பழுதானதால் பயணிகள் ரெயில் நடுவழியில் நிறுத்தம் 4 ரெயில்கள் 2½ மணி நேரம் தாமதம்
தஞ்சை அருகே பயணிகள் ரெயில் என்ஜின் பழுதானதால், 4 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, 2½ மணி நேர தாமதத்துக்கு பிறகு இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
5. கோவா விமானம் தாமதம் : நடிகை நக்மா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவா செல்லும் ஏர் இந்தியா விமானம் காலை 9 மணி அளவில் வழக்கம் போல் புறப்பட்டு செல்லும்.