16 நாடுகளுக்கு இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் சேர இந்தியா மறுப்பு
ஆசியான் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் சேர இந்தியா மறுத்து விட்டது.
பாங்காக்,
ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 6 நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில் ‘பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை’ உருவாக்க இந்த நாடுகளிடையே கடந்த 2012-ம் ஆண்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடித்து ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்த நாடுகள் தீவிரம் காட்டின. தாய்லாந்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த ஆசியான் தொடர்பான நிகழ்வுகளுக்கு இடையேயும், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.
இந்த நிலையில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் சேர இந்தியா மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விஜய் தாகூர் சிங் நேற்று பாங்காக்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக 16 நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த தடையில்லா ஒப்பந்தத்தில் நாங்கள் சேரமாட்டோம் என்பதை பிற உறுப்பு நாடுகளுக்கு தெரிவித்து விட்டோம்.
இந்த ஒப்பந்தம் அனைத்து இந்தியர்களின் குறிப்பாக சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதை பிரதமர் மோடி, அந்த கூட்டத்தில் எடுத்துரைத்தார். ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்கள் தொடர்பான காந்தியடிகளின் அறிவுரைகளை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். மேலும் இந்த ஒப்பந்தம் அவர்களுக்கு எந்த வகையிலாவது பலனளிக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த மகா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு முக்கியமான பிரச்சினைகள் ஏற்படும். அவை தீர்க்கப்படாமலேயே இன்னும் இருக்கின்றன. இவ்வாறு விஜய் தாகூர் சிங் தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருந்தது. குறிப்பாக இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை பாதிக்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அச்சம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story