உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் + "||" + Ex-Pakistan PM Nawaz Sharif discharged from hospital

நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவருக்கு வீட்டில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர்,

மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். பனாமா கேட் ஊழல் வழக்கில், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  சிறையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். அவரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. 

இந்நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது நவாஸ் ஷெரீப் வீடு திரும்பி இருக்கிறார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நவாஸ் ஷெரீப் உடல்நிலை  தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது. நவாஸ் ஷெரீப்பை பார்வையாளர்கள் பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அவரது செய்தி  தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
2. இந்தியாவுடனான மோதல்: சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு...! மூத்த தலைவர் எச்சரிக்கை
இந்தியாவுடனான மோதல் காரணமாக சீனாவின் இராணுவத்தில் புரட்சி வெடிக்க கண்டிப்பாக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் மூத்த தலைவர் எச்சரித்துள்ளார்.
3. கராச்சி பங்குசந்தை கட்டிட தாக்குதல: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி
பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது வீண் பழிசுமத்துகிறது என இந்திய தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
4. . பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது மேலும் ஒரு ஊழல் வழக்குப்பதிவு
நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், ஊழல் வழக்கு,
5. ஒசாமா பின்லேடனை தியாகி என குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ;வலுக்கும் எதிர்ப்பு
பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.