உலக செய்திகள்

பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு + "||" + Pakistan exporting terror, stifling women’s voices for narrow political gains: India at UNSC

பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்று ஐ.நா.வில் இந்தியா கடுமையாக சாடியது.
நியூயார்க், 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை, சர்வதேச பிரச்சினையாக்க முயன்று தோல்வி அடைந்த பாகிஸ்தான், கடும் விரக்தியில் உள்ளது.  ஐநாவில் இவ்விவகாரத்தை தொடர்ந்து  எழுப்பி வரும் பாகிஸ்தான், கடந்த 29–ந்தேதி பாதுகாப்பு கவுன்சிலிலும் இது தொடர்பாக குற்றம் சாட்டியது. 

குறிப்பாக காஷ்மீரின் தற்போதைய நிலவரம், அங்கு பெண்களின் நிலை என பல்வேறு அம்சங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி மலீகா லோதி பேசினார். 

இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.  அமைதி, பாதுகாப்பு மற்றும் பெண்கள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த விவாதத்தில் இந்தியா சார்பில் பேசிய ஐ.நா.வுக்கான நிரந்தரக்குழு செயலாளர் பாலோமி திரிபாதி, பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் அந்த நாடு மீது மறைமுகமாக  கடுமையாக விமர்சித்தார். 

பயங்கரவாதத்தை தூண்டுவதும், பிற்போக்குத்தனமான பயங்கரவாத சித்தாந்தங்களை போதிப்பதும், மலிவான அரசியல் லாபத்துக்காக பெண்களின் குரலை நசுக்குவதுமே அவர்களின் நடைமுறை ஆகும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.300
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
2. பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை
இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
3. 2-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை நிர்ணயித்தது வங்காளதேசம்
இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை வங்காளதேச அணி நிர்ணயித்துள்ளது.
4. வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? - 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது
மழை மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்றிரவு நடக்கிறது.
5. பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை எனத்தகவல்
பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.