உலக செய்திகள்

விமானி அறைக்குள் இளம்பெண்: விமானம் ஓட்ட சீன விமானிக்கு வாழ்நாள் தடை + "||" + Chinese pilot banned from flying after passenger cockpit photo

விமானி அறைக்குள் இளம்பெண்: விமானம் ஓட்ட சீன விமானிக்கு வாழ்நாள் தடை

விமானி அறைக்குள் இளம்பெண்: விமானம் ஓட்ட சீன விமானிக்கு வாழ்நாள் தடை
விமானி அறைக்குள் இளம்பெண் ஒருவர் பயணம் செய்ததால், விமானம் ஓட்ட சீன விமானிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
பீஜிங்,

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் விமானத்தில் பயணம் செய்தபோது, விமானியின் அறைக்குள் சென்று அமர்ந்திருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதன்கீழ் அவர் “விமானிக்கு நன்றி, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார். விமான விதிமுறைகளின்படி பயணிகள் யாரும் விமானி அறைக்குள் நுழைவதற்கு அனுமதி கிடையாது என்பதால் அவரது இந்த புகைப்படம் குறுகிய நேரத்தில் மிகவும் வைரலானது. அதே சமயம் விதிமுறைகளை மீறி பயணியை விமானி அறைக்குள் அனுமதித்ததாக சர்ச்சை எழுந்தது.


இது குறித்து விசாரித்ததில் அந்த புகைப்படம் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி குய்லின் நகரில் இருந்து யாங்சூ நகருக்கு சென்ற ஏர் குய்லின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பெண் பயணியை விமானி அறைக்குள் அனுமதித்த அந்த விமானிக்கு விமானம் ஓட்ட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. எனினும் அந்த விமானியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அதுமட்டும் இன்றி இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற விமான ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக ஏர் குய்லின் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய் கொலை: இளம்பெண்-காதலன் கைது
திருவையாறு அருகே முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை கொலை செய்த இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
2. ஆண்டிப்பட்டி அருகே, ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், மதுவில் டீசல் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு
ராஜஸ்தானில் ஒரே பிரசவத்தில் இளம்பெண் பெற்றெடுத்த 5 குழந்தைகளில் ஒன்று உயிரிழந்து உள்ளது.
5. ஹைதராபாத்: மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி
மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் பலியானார்.