உலக செய்திகள்

காரின் மீது அமர முயன்ற யானை; வைரலாகும் வீடியோ + "||" + Elephant sits on car in viral video

காரின் மீது அமர முயன்ற யானை; வைரலாகும் வீடியோ

காரின் மீது அமர முயன்ற யானை; வைரலாகும் வீடியோ
தாய்லாந்து நாட்டின் தேசிய பூங்கா ஒன்றில் காரின் மீது யானை அமர முயன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பாங்காக்,

தாய்லாந்து நாட்டில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது.  இங்குள்ள தானாரத் சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.  இந்நிலையில், பூங்காவில் இருந்த டியூவா என்ற ஆண் யானை (வயது 35) காரை வழிமறித்துள்ளது.

இதன்பின் காரின் மீது யானை ஏற முயன்றுள்ளது.  அங்கிருந்து தப்பி செல்ல காரின் ஓட்டுனர் முயற்சிக்கும்பொழுது, குறுக்கே சென்ற யானை தனது உடலை காரின் மீது வைத்து அமருவதற்கு முயன்றது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  காரின் பின்புற ஜன்னல், மேற்கூரை மற்றும் நடுப்பகுதி ஆகியவை சேதமடைந்தன.

இதுபற்றி பூங்கா இயக்குனர் சரீன் பவான் கூறும்பொழுது, ஈரப்பதம் மற்றும் குளிர்கால சூழலில் சுற்றுலாவாசிகளை வரவேற்கவே டியூவா வெளியே வந்துள்ளது.  அந்த நடுத்தர வயதுடைய யானை யாரையும் அல்லது எந்த வாகனங்களையும் துன்புறுத்துவது கிடையாது என கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருப்பதற்காக சுற்றுலாவாசிகள் தங்களது கார்களை யானைகளிடம் இருந்து 30 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விடுங்கள் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவை அருகே பரபரப்பு வாயில் காயத்துடன் சுற்றிய காட்டு யானை பரிதாப சாவு
கோவை அருகே வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
2. யானையை மீட்க சென்ற போது பரிதாபம்: காண்டூர் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட வனக்காவலர் பலி
யானையை மீட்க சென்ற போது காண்டூர் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட வனக்காவலர் பலியானார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
3. முதுமலையில் குட்டியானையை புலி அடித்து கொன்றது உடல் அருகில் தாய் யானை பாசப்போராட்டம்
முதுமலையில் குட்டியானையை புலி அடித்து கொன்றது. அதன் உடல் அருகில் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தியது.
4. மின் வேலியில் சிக்கி யானை சாவு விவசாயி கைது
தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி யானை இறந்தது. இதுதொடர்பாக விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.