உலக செய்திகள்

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் பலி + "||" + Powerful earthquake in Iran kills 5 people

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் பலி

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் பலி
ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் பலியாகி உள்ளனர்.
டெஹ்ரான்,

ஈரானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அசர்பைஜன் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.


இந்த நிலநடுக்கம் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர்; 120-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 2003-ம் ஆண்டு ஈரானின் பாம் நகரில் ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 26 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாப சாவு - 30 பேர் படுகாயம்
ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதம்
ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் - 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தகவல்
ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தெரிவித்துள்ளது.
4. அலாஸ்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவானது.