உலக செய்திகள்

உகாண்டா நாட்டில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலி + "||" + 6 killed in lightning in Uganda country

உகாண்டா நாட்டில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலி

உகாண்டா நாட்டில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலி
உகாண்டா நாட்டில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* மெக்சிகோவின் வெராகுருஸ் மாகாணத்தில் லாரிக்குள் அடைத்து வைத்து கடத்தி வரப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 100 அகதிகளை போலீசார் மீட்டனர். அவர்கள் அனைவரும் கவுதமலா, எல் சல்வடார் மற்றும் கொலம்பியா நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


* கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அங்கு மழை, வெள்ளத்துக்கு இதுவரை 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆப்கானிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், 8 ஆயிரத்து 400 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு எண்ணிக்கையை நடத்த இருப்பதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* உகாண்டா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள படேர் நகரில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* காங்கோ நாட்டை சேர்ந்த கிளர்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரான போஸ்கோ என்டகாண்டாவுக்கு போர் குற்றவழக்கில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்த கோர விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. உகாண்டாவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் வெடித்து விபத்து: 19 பேர் பலி
உகாண்டாவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர்.