உலக செய்திகள்

அமெரிக்காவில் கோர விபத்து: வீட்டுக்குள் விழுந்த விமானம் + "||" + Accident in the United States: Airplane crash

அமெரிக்காவில் கோர விபத்து: வீட்டுக்குள் விழுந்த விமானம்

அமெரிக்காவில் கோர விபத்து: வீட்டுக்குள் விழுந்த விமானம்
அமெரிக்காவில் வீட்டுக்குள் விமானம் விழுந்த கோர விபத்தில், அதை இயக்கிய விமானி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் டோரன்ஸ் நகரில் இருந்து உப்லண்ட் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. 4 பேர் அமரக்கூடிய இந்த விமானத்தில் விமானி மட்டும் இருந்தார்.

சான் பெர்னார்டினோ நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மிகவும் தாழ்வாக பறந்த விமானம் அங்குள்ள வீட்டின் மேற்கூரையை உடைத்து கொண்டு உள்ளே விழுந்தது.


விழுந்த வேகத்தில் விமானத்தில் தீப்பிடித்தது. இதில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். அதே சமயம் வீட்டுக்குள் இருந்த ஒரு குழந்தை உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள் - வியப்பில் ஆழ்ந்த மக்கள்
அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்களை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
2. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு 10 ஆயிரம் அமெரிக்க தாக்குதல் துப்பாக்கிகளை வாங்கிய இந்தியா
ரூ.700 கோடிக்கு 72 ஆயிரம் அமெரிக்க தயாரிப்பு தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியா ஒப்பந்தம் செய்து உள்ளது.
3. அமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்
அமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு வாழைப்பழம் ஒன்று ஏலம் போனது.
4. அமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணம்
அமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணமடைந்தார்.
5. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - வடகொரியா திட்டவட்டம்
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.