உலக செய்திகள்

அணு ஆயுத கைவிடல் பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு குறைவு - வடகொரியா திடீர் அறிவிப்பு + "||" + About nuclear abandonment Less likely to negotiate with the US North Korea's sudden announcement

அணு ஆயுத கைவிடல் பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு குறைவு - வடகொரியா திடீர் அறிவிப்பு

அணு ஆயுத கைவிடல் பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு குறைவு - வடகொரியா திடீர் அறிவிப்பு
அணு ஆயுத கைவிடல் பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு குறைவு என்று வடகொரியா திடீர் அறிவிப்பை அறிவித்துள்ளது.
மாஸ்கோ, 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து முதன்முதலாக பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதியும், 28-ந் தேதியும் வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் சந்தித்து பேசினர். ஆனால் இது இணக்கமாக நடைபெறாமல் பாதியிலேயே முடிந்தது.

மீண்டும் கொரிய எல்லையில் ஜூன் 30-ந் தேதி இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றி தொடர்ந்து பேசுவது என ஒப்புக்கொண்டனர். ஆனாலும் பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஒரு மாநாட்டில் வடகொரியாவின் வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி ஜோ சோல் சு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “அமெரிக்காவுக்கு நாங்கள் நிறைய அவகாசம் தந்து விட்டோம். அவர்களிடம் இருந்து பதில் வர இந்த ஆண்டு இறுதி வரை காத்திருப்போம். ஆனாலும், அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்” என குறிப்பிட்டார்.

“வடகொரியா மீதான பொருளாதார தடைகள் ஏற்க முடியாத அவமதிப்பு. அவை நீக்கப்பட வேண்டும். அதைச் செய்யாமல் பேசுவதற்காக சந்திப்பு நடத்துவதில் நாங்கள் உறுதியான முடிவை எதிர்பார்க்க முடியாது” என்றும் அவர் கூறினார்.