உலக செய்திகள்

வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு + "||" + In Bangladesh in hitting Bulbul Storm the number of victims rises to 13

வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பெயரை வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அரசு நீக்காததால் அவர் சிகிச்சைக் காக லண்டன் செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதனால் நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகி வருவதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.


* வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்தாகவும், லட்சக் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* திபெத்தின் அடுத்த தலாய் லாமா சீனாவை சேர்ந்தவராக இருக்கமாட்டார் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாம் பிரவுன்பாக் அண்மையில் கூறினார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஐ.நா.வை ஒரு கருவியாக கொண்டு திபெத் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதாக குற்றம் சாட்டி உள்ளது.

* இங்கிலாந்தில் கடந்த 1987-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 32 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த கெய்த் வாஸ் (வயது 62). இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த இந்திய வம்சாவளி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை அருகே சரக்கு வேன் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் பலி; 13 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது சரக்கு வேன் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
2. ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் பலி
ரெயிலில் அடிபட்டு கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. சூடான் தொழிற்சாலை விபத்தில் பலியான பண்ருட்டி வாலிபர் பற்றி உருக்கமான தகவல்கள்
சூடான் தொழிற்சாலை விபத்தில் பலியான பண்ருட்டி வாலிபர் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
4. பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி பலி
பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி இறந்தார்.
5. விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ந‌‌ஷ்டஈடு வழங்காததால் ராசிபுரத்தில் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ந‌‌ஷ்டஈட்டு தொகை வழங்காததால், ராசிபுரத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.