உலக செய்திகள்

சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ + "||" + Human-faced miracle fish in China - video on the social website Viral

சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ

சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ
சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீனின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பீஜிங்,

சீனாவின் யுனான் மாகாணம் குன்மிங்க நகரில் உள்ள மியோ என்ற கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கு அண்மையில் சுற்றுலா வந்த இளம் பெண் ஒருவர் ஏரியை சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.


அப்போது ஏரியில் நீளமான மீன் ஒன்று கரையை நோக்கி நீந்தி வந்ததை அவர் கண்டார். அந்த மீனுக்கு மனிதர்களை போல் கண்கள், மூக்கு மற்றும் வாய் போன்றவற்றுடன் முகம் இருந்ததை கண்டு அவர் ஆச்சரியமடைந்தார்.

உடனடியாக அவர் அந்த அதிசய மீனை, தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் 12 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தாய் மீது மோதிய கார்: ஆவேசத்தில் சிறுவன் செய்த செயல் வீடியோ
சீனாவில் சிறுவன் ஒருவர் தன் தாய் மீது மோதிய காரை காலால் எட்டி மிதித்தும் ஆவேசமாகக் குரல் எழுப்பியும் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
2. மொபைலை பயன்படுத்த முகத்தை ஸ்கேன் செய்வதை கட்டாயமாக்கும் சீனா
சீனாவில் புதிய மொபைல் போன் சேவைகளைப் பதிவுசெய்யும் மக்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
3. சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்து 4 பேர் பலி - 8 பேரின் கதி என்ன?
சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகினர். மேலும் 8 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
4. சீனாவின் ஆதிக்கத்தை வளரவிடாமல் இலங்கையை இந்தியா பாதுகாக்க வேண்டும் -இலங்கை எம்பி வலியுறுத்தல்
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை வளரவிடாமல் இந்தியா பாதுகாக்க வேண்டும் என இலங்கையின் மட்டகளப்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
5. சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி - 5 பேர் காயம்
சீனாவின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.