உலக செய்திகள்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கொல்லப்பட்டார் + "||" + Israeli airstrike kills Islamic Jihad commander in Gaza home

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கொல்லப்பட்டார்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கொல்லப்பட்டார்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பஹா அபு எல்-அட்டா கொல்லப்பட்டார்.
தெஹ்ரான்,

சர்வதேச அளவில் ஆதரவு பெற்ற பாலஸ்தீனிய அதிகாரசபையிலிருந்து 2007ல் காசாவை வலுக்கட்டாயமாகக் ஹமாஸ் கைப்பற்றியதிலிருந்து, இஸ்ரேல் மற்றும் காசா போராளிகள் மூன்று போர்களை நடத்தினர். 2014ல் மூன்றாவது போர்  50 நாட்கள் நீடித்தது. இதனால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது.

இதுபோல் அடிக்கடி வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது சுமார் 10 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு அபு எல்-அட்டா  தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில் காசாவில் மூத்த இஸ்லாமிய ஜிஹாத் ஈரானிய ஆதரவு தளபதி பஹா அபு எல்-அட்டா கொல்லப்பட்டார்.  வான்வழித் தாக்குதலில் ஒரு ஆணும் பெண்ணும் கொல்லப்பட்டதாகவும் மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள தகவலில் தெஹ்ரானில்  தெற்கு இஸ்ரேல் சமூகங்களுக்கு எதிராக சமீபத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு  அபு எல்-அட்டா தான் காரணம் . இதை தொடர்ந்து  உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சிரியாவில் இஸ்ரேல் வான்தாக்குதலில் 7 பேர் பலி
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
2. ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும்: மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்
புதிய தலைநகருடன் பாலஸ்தீன அரசு உருவாகும் என்றும், ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும் என்றும் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்.
3. ஹமாஸ் பயங்கரவாத முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஹமாஸ் பயங்கரவாத முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.