உலக செய்திகள்

பெண்ணியம், நாத்திகம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை தீவிரவாத கருத்துக்களாக சவுதி அரேபியா அடையாளப்படுத்துகிறது + "||" + Saudi Arabia labels feminism, atheism, homosexuality as extremist ideas

பெண்ணியம், நாத்திகம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை தீவிரவாத கருத்துக்களாக சவுதி அரேபியா அடையாளப்படுத்துகிறது

பெண்ணியம், நாத்திகம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை தீவிரவாத கருத்துக்களாக சவுதி அரேபியா அடையாளப்படுத்துகிறது
பெண்ணியம், நாத்திகம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை தீவிரவாத கருத்துக்களாக அடையாளப்படுத்தும் வீடியோவை சவுதி அரேபியா வெளியிட்டு உள்ளது.
துபாய்,

சவுதி அரேபியாவின் எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை மாற்றுவதற்காகவும்,  அந்நிய முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பட்டத்து  இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு திட்டங்களை சவுதி அரேபியாவில் செயல்படுத்தி வருகிறார். இஸ்லாத்தின் மிகவும் மிதமான வடிவத்திற்கு அழுத்தம் கொடுத்து தேசியவாத உணர்வை ஊக்குவித்து வருகிறார்.

சமூக கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார் மற்றும் சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு சவுதி அரேபியா 20 நாடுகள்  குழுவின் தலைவராக பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார்.

சவுதி அரேபியாவின் அரசு பாதுகாப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பர வீடியோவில், பழமைவாத முஸ்லிம் அரசான சவுதி அரேபியா  சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கவும்,  வெளிநாட்டினரை ஈர்க்க முயன்றபோதும், "பெண்ணியம் பேசுதல், ஓரினச்சேர்க்கை மற்றும் நாத்திகம்" ஆகியவற்றை தீவிரவாத செயல்களாக வகைப்படுத்தி உள்ளது.

மாநில பாதுகாப்பு அதிகாரியின் அதிகாரப்பூர்வ  ட்விட்டரில் வெளியிடப்பட்ட அனிமேஷன் வீடியோவில்  "அனைத்து வகையான தீவிரவாதம் மற்றும் வக்கிரம் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறப்பட்டு உள்ளது. தக்ஃபீருடன் சேர்ந்து அந்தக் கருத்துக்களை பட்டியலிட்டு உள்ளது. தாய்நாட்டின் இழப்பில் அதிகமாகப் பெறுவது தீவிரவாதமாகத்தான் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்  என கூறப்பட்டு உள்ளது.