வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு


வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Nov 2019 10:15 PM GMT (Updated: 12 Nov 2019 8:22 PM GMT)

வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.


* அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள 2 விமான நிலையங்களில் இருந்து புறப்படும் சுமார் 1,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

* வங்காளதேசத்தை ‘புல்புல்’ புயல் புரட்டிப்போட்டு விட்டது. இந்த புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

* பெரு நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள புனோ நகரில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 37 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தினரை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 20 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

* ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 2 பேரை மீட்பதற்காக, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூத்த தலீபான் உறுப்பினர்கள் 3 பேரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப்கனி கூறினார்.


Next Story