உலக செய்திகள்

அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பதக்கம் + "||" + Another medal for O. Pannirselvam who has gone to America

அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பதக்கம்

அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பதக்கம்
அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பதக்கம் வழங்கப்பட்டது.
சிகாகோ,

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சிகாகோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.


இந்த நிகழ்ச்சியில், இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா, தேனி தொகுதி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார், தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன், சிகாகோ தமிழ் தொழில் முனைவோர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோல், நெபர்வல்லியில் உள்ள மூத்த குடிமகன்களுக்கான மெட்ரோபாலிட்டன் ஏசியா பேமிலி சர்வீசஸ் மையத்தின் சார்பில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அவருக்கு ‘மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்’ என்ற பதக்கம் வழங்கப்பட்டது.

அவரது மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத்குமாருக்கு மகாத்மா காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் - அமெரிக்கா
இந்தியா தனது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
2. அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள் - வியப்பில் ஆழ்ந்த மக்கள்
அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்களை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
3. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு 10 ஆயிரம் அமெரிக்க தாக்குதல் துப்பாக்கிகளை வாங்கிய இந்தியா
ரூ.700 கோடிக்கு 72 ஆயிரம் அமெரிக்க தயாரிப்பு தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியா ஒப்பந்தம் செய்து உள்ளது.
4. அமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்
அமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு வாழைப்பழம் ஒன்று ஏலம் போனது.
5. அமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணம்
அமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணமடைந்தார்.