பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.300


பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.300
x
தினத்தந்தி 13 Nov 2019 8:13 PM GMT (Updated: 13 Nov 2019 8:13 PM GMT)

பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்து கொண்டது. இதனால் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் மழை வெள்ளத்தால் பாகிஸ்தானில் தக்காளி சாகுபடி கணிசமாக குறைந்து உள்ளது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஈரானில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் ஆலோசித்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் தக்காளி விலை உயர்வை மறுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து பிரதமர் இம்ரான்கானின் நிதி ஆலோசகர் அப்துல் ஹபீஸ் சேக் நிருபர்களிடம் கூறுகையில், ‘கராச்சி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.17-க்கு விற்கப்படுகிறது. மக்கள் பொய் கூறுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

Next Story