பயங்கரவாதத்தின் டி.என்.ஏ. பாகிஸ்தானிடம் உள்ளது : யுனெஸ்கோவில் இந்தியா பதிலடி + "||" + Pakistan Has "DNA Of Terrorism": India's Reply On Kashmir At UNESCO
பயங்கரவாதத்தின் டி.என்.ஏ. பாகிஸ்தானிடம் உள்ளது : யுனெஸ்கோவில் இந்தியா பதிலடி
பயங்கரவாதத்தின் டி.என்.ஏ. பாகிஸ்தானிடம் தான் உள்ளது என்று யுனெஸ்கோவில் இந்தியா கடுமையாக சாடியது.
பாரிஸ்,
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டில் ரத்து செய்தது. இந்தியாவின் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இப்பிரச்சினையை சர்வதேச அளவில் எடுத்துச்செல்ல முயன்று தோற்றுப்போனது.
உலக அளவில் பாகிஸ்தானுக்கு எந்த நாடும் காஷ்மீர் பிரச்சினையில், போதிய ஆதரவு அளிக்கவில்லை. இதனால், விரக்தியில் உள்ள பாகிஸ்தான், கிடைக்கும் தளங்களில் எல்லாம் இப்பிரச்சினையை பற்றி பேசி வருகிறது.
அந்த வகையில், பிரான்சு தலைநகர் பாரிசில் யுனெஸ்கோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, பயங்கரவாதத்தின் டி.என்.ஏ. பாகிஸ்தானிடம் தான் உள்ளது என்று கடுமையாக சாடியது.
இந்திய குழுவிற்கு தலைமை தாங்கிய அதிகாரி அனன்யா அகர்வால் பேசும்போது, பாகிஸ்தானின் நடவடிக்கைகளை, அதன் பலவீனமான பொருளாதாரம், பிரிவினைக்கு உள்ளான சமூகம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்நாடு, பயங்கரவாதத்தின் டிஎன்ஏவாக உள்ளது.
பயங்கரவாதிகளான ஒசாமா பின்லாடன், ஹக்கானி, பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் பாகிஸ்தானின் கதாநாயகர்கள் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.
தனது சொந்த மண்ணில் உள்ள சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்க முடியாமல், சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக அவதூறு பரப்ப பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. கடந்த 1947ல் பாகிஸ்தானில் 23 சதவீதமாக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை, தற்போது 3 சதவீதமாக எப்படி குறைந்தது.” இவ்வாறு அவர் பேசினார்.
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 900 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படையிடம் சரணடைந்திருப்பதாகவும், அதில் 10 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கோத்தபய ராஜபக்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.