உலக செய்திகள்

இந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு + "||" + Traces of Hindu Temples, Life of Alexander Found in 3000-year-old City Discovered in Pakistan

இந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

இந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
இந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இஸ்லாமாபாத்,

வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் பாரிகோட் தெஹ்ஸிலில், பாகிஸ்தான் மற்றும் இத்தாலியை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட்டு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்கள்  3000 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டுபிடித்து உள்ளனர்.  அந்த நகரத்தின் பெயர் பஜீரா. இது  5,000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்திற்கும், கலைப்பொருட்களுக்கும் புகழ் பெற்றது ஆகும்.

இந்த கண்டுபிடிப்பில் இந்து கோவில்கள், நாணயங்கள், ஸ்தூபம், பானைகள் மற்றும் அந்தக் காலத்தின் ஆயுதங்கள் உள்ளன.

கிமு 326ல் அலெக்சாண்டர் தனது படையுடன்  பாகிஸ்தானின் ஸ்வாட்டுக்கு வந்து ஓடிகிராம் பகுதியில் நடந்த போரில் எதிரிகளை தோற்கடித்து பஜீரா என்ற சுவர் நகரத்தையும், ஒரு கோட்டையையும் கட்டினார் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அலெக்சாண்டரின் காலத்திற்கு முன்பே அந்த நகரத்தில் மனித வாழ்க்கையின் தடயங்களையும் நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர். அலெக்சாண்டருக்கு முன்பு, இந்தோ-கிரேக்கம், புத்மத், இந்து ஷாஹி மற்றும் இஸ்லாமை பின்பற்றுபவர்கள் அந்த நகரத்தில் வசித்து வந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் பஸ் மீது வேன் மோதி தீப்பிடித்ததில் 15 பேர் பலி
பாகிஸ்தானில் பஸ் மீது வேன் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகினர்.
2. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
3. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி நிதான ஆட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி நிதானமாக விளையாடி வருகிறது.
4. குடியுரிமை சட்ட திருத்த மசோதா ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில், பாகிஸ்தான் பேசுவதை போலவே இங்குள்ள சில கட்சிகள் பேசுகின்றன என பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. மரியம் நவாஸ் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவு
மரியம் நவாஸ் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை குறித்து பதிலளிக்க பாகிஸ்தான் அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.