பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு - மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின


பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு - மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின
x
தினத்தந்தி 15 Nov 2019 10:38 PM GMT (Updated: 15 Nov 2019 10:38 PM GMT)

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.


* பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.

* பொலிவியாவில் அதிபர் இவோ மோரலஸ் பதவி விலகிய பிறகு அந்த நாட்டின் புதிய வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள கரென் லோங்காரிக், ஐ.நா. சபை மற்றும் கியூபா நாட்டுக்கான தூதர்கள் 2 பேரை பணியில் இருந்து நீக்கினார்.

* ஜனநாயக கட்சியினர் தனக்கு எதிராக நடத்தி வரும் பதவி நீக்க விசாரணை தனது குடும்பத்தினருக்கு கடுமையான வலிகளை கொடுத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்.

* பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமல்படுத்தப்பட்ட சண்டை நிறுத்தத்தை மீறி பிஜேஜே பயங்கரவாத அமைப்புகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

* ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக மலேசியாவுக்கு செல்ல படகில் பயணித்த போது, அவர்களது படகு வங்காள விரிகுடா கடலில் கோளாறு ஏற்பட்டு நின்றது. மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் படகில் சிக்கியிருந்த 122 ரோஹிங்கியா முஸ்லிம்களை வங்காளதேச கடற்படையினர் மீட்டனர்.

Next Story