உலக செய்திகள்

ஈராக்கில் பெரும் பதற்றம்: போராட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்தில் குண்டுவெடிப்பு - 6 பேர் உடல் சிதறி பலி + "||" + Deadly bomb explosion hits Baghdad amid anti-gov't protests

ஈராக்கில் பெரும் பதற்றம்: போராட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்தில் குண்டுவெடிப்பு - 6 பேர் உடல் சிதறி பலி

ஈராக்கில் பெரும் பதற்றம்: போராட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்தில் குண்டுவெடிப்பு - 6 பேர் உடல் சிதறி பலி
ஈராக்கில் போராட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 6 பேர் உடல் சிதறி பலியாகினர்.
பாக்தாத்,

ஈராக் நாடு, தொடர் போர்களால் சீரழிந்து விட்டது. அங்கு பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஊழலுக்கு குறைவில்லை. இது மக்கள் மத்தியில் அரசின்மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.


அந்த நாட்டின் பிரதமர் அதெல் அப்துல் மஹதி பதவி விலகக்கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் உருவாகி, உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அங்கு பாக்தாத் நகரில் உள்ள புகழ் பெற்ற தஹ்ரிர் சதுக்கம் அருகே அமைந்துள்ள தயரன் சதுக்கம் முன்பாக போராட்டம் நடத்துவதற்காக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கார் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்தப் பகுதியே இதில் அதிர்ந்தது. பெரும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. அங்கு கூடியிருந்தவர்கள் அலறியடித்தவாறு நாலாபக்கமும் ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ஈராக்கில் சிறிய தளங்களில் இருந்து அமெரிக்க கூட்டுப்படைகள் விலகல்
ஈராக்கில் சிறிய தளங்களில் இருந்து அமெரிக்க கூட்டுப்படைகள் விலக்கி கொள்ளப்படுகின்றன.
2. ஈராக்கில் பரபரப்பு: அமெரிக்க படைத்தளம் மீது ராக்கெட் தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்க படைத்தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
3. ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலியாகினர்.
4. சூடானில் பரபரப்பு: குண்டு வெடிப்பில் பிரதமர் உயிர் தப்பினார்
சூடானில் குண்டு வெடிப்பில் அந்நாட்டு பிரதமர் உயிர் தப்பினார்.
5. ஈராக்கில் பரபரப்பு: அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.