உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - டிரம்ப் அறிவிப்பு + "||" + Public apology to 2 US military personnel involved in war crimes in Afghanistan - The Trump announcement

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - டிரம்ப் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - டிரம்ப் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடங்கிய போர் 19-வது ஆண்டாக நீடித்து வருகிறது. அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை விரட்டியடித்து விட்டாலும்கூட, அமெரிக்க படைகள் அங்கிருந்து தலீபான்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.


இந்த நிலையில் அங்கு அமெரிக்க படையில் இடம் பெற்று போர் புரிந்து வந்த 2 ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் கிளிண்ட் லாரன்ஸ், மேஜர் ஜெனரல் மேத்யூ கோல்ஸ்டீன் ஆகியோர் மீது விசாரணை நடைபெற்றது.

அமெரிக்க படை வீரர்களை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சுட்டுக்கொல்லும்படி சக வீரர்களுக்கு கிளிண்ட் லாரன்ஸ் உத்தரவிட்டதில் 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 6 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

ஆப்கானிஸ்தானில் பிடிபட்டிருந்த ஒரு பயங்கரவாதி வெடிகுண்டு தயாரிப்பதில் வல்லுனராக இருந்து, அமெரிக்க படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்ததாக கூறி மேத்யூ கோல்ஸ்டீன் சுட்டுக்கொன்று விட்டார். அவர் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு ஜனாதிபதி டிரம்ப் மன்னிப்பு வழங்கி உள்ளார்.

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளான கடற்படை அதிகாரி எட்வர்டு கல்லாகர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவருடைய தகுதியை ரத்து செய்ததை திரும்ப வழங்கி ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் அரசு- தலீபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது
ஆப்கானிஸ்தானின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது
2. ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
3. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார்
ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
4. ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலியானார்கள்.
5. உலகிற்கே ஆபத்தான 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்யும் பணியை தொடங்கிய ஆப்கானிஸ்தான்
உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகளையும் விடுதலை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.