உலக செய்திகள்

“என்மீது செக்ஸ் புகார் கூறிய பெண்ணை சந்தித்ததே இல்லை’ - இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பேட்டி + "||" + “I have never met a woman who complained about sex - Interview with Prince Andrew of England

“என்மீது செக்ஸ் புகார் கூறிய பெண்ணை சந்தித்ததே இல்லை’ - இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பேட்டி

“என்மீது செக்ஸ் புகார் கூறிய பெண்ணை சந்தித்ததே இல்லை’ - இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பேட்டி
என்மீது செக்ஸ் புகார் கூறிய பெண்ணை நான் சந்தித்ததே இல்லை என்று இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மறுத்தார்.
லண்டன்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன் ஆண்ட்ரூ (வயது 59). இவர் இளவரசர் சார்லசுக்கு தம்பியும் ஆவார்.

சாரா என்ற பெண்ணை ஆண்ட்ரூ திருமணம் செய்து, 1996-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார்.


இவரது நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர், அமெரிக்காவை சேர்ந்த பைனான்சியர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் போன்ற அரசியல் பிரபலங்களுடனும் நெருங்கி உறவாடியவர்.

அதே நேரத்தில் இந்த ஜெப்ரி எப்ஸ்டீன், பாலியல் புகார்களுக்கு பெயர் போனவர். இவர் பாலியல் வழக்கில் சிக்கி கடந்த ஜூலை மாதம் நியூயார்க் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். சிறுமிகளை கரிப்பீயன் தீவில் உள்ள தனது சொகுசு வீட்டிலும், அமெரிக்காவின் பாம் பீச் வீட்டிலும் வைத்து பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான வழக்கில் அவர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் அமெரிக்க பெண், ராபர்ட்ஸ் என்று அழைக்கப்பட்ட வெர்ஜினியா கியுப்ரே ஆவார்.

இந்த கியுப்ரே, இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மீதும் பரபரப்பு செக்ஸ் புகார்களை கூறி அதிர வைத்தார்.

அப்போது அவர் கூறும்போது ஜெப்ரி எப்ஸ்டீன் என்னுடன் ஆண்டுக்கணக்கில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்ட நிலையில், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பணக்கார நண்பர்களுக்கு விருந்து ஆக்கினார் என குறிப்பிட்டார்.

மேலும், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவுடன் 3 முறை செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுமாறு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன் எனவும் கூறினார்.

இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “அவர் என்ன செய்தார் என்பது அவருக்கு மிகச்சரியாக தெரியும்” என்று கூறினார்.

தனது 17 வயதில் இளவரசர் ஆண்ட்ரூ உடன் லண்டனில் வைத்தும், பின்னர் நியூயார்க் நகரில் வைத்தும், அதன்பின்னர் கரீப்பியன் தீவில் வைத்தும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இளவரசர் ஆண்ட்ரூ, இந்தப் பெண் மீது கைபோட்டுக்கொண்டும், ஜெப்ரி எப்ஸ்டீனின் தோழி ஜிஸ்லைனே மேக்ஸ்வெல் அவர்களின் பின்னால் நிற்கும் படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது இது தொடர்பாக இளவரசர் ஆண்ட்ரூ பி.பி.சி.க்கு பேட்டி அளித்தார். இந்தப் பேட்டியில் அவர் அப்படி ஒரு பெண்ணை தான் சந்தித்ததாக நினைவில் இல்லை என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “இந்தப் பெண்ணை நான் எப்போதும் சந்தித்ததாக என் நினைவில் இல்லை. எதுவும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் தனக்கும் ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் இடையே நட்புறவு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “நான் அவருடன் (ஜெப்ரி எப்ஸ்டீன்) தங்கி உள்ளேன். அதுதான் தவறு... அதற்காக என்னை நான் உதைத்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அரச குடும்ப உறுப்பினர் என்ற வகையில் நாங்கள் உயர்ந்த தரத்தையும், பழக்க வழக்கத்தையும் பின்பற்ற முயற்சித்து வருகிறோம்” என்றும் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பல்லடத்தில் பெண்ணை குத்திக்கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவர்
மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. நாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு
நாகர்கோவிலில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
3. கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: தலைமறைவான பெண்முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கேரள அரசை உலுக்கி வரும் தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் பெண், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஐகோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
4. சிறப்பு ரெயிலில் சென்றபோது பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது: 2 குழந்தைகளும் சில மணி நேரத்திலேயே உயிரிழந்ததால் சோகம்
சிறப்பு ரெயிலில் சென்றபோது ரெயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த 2 குழந்தைகளும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
5. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்
திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.