உலக செய்திகள்

வங்காள தேசத்தில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலி + "||" + At least seven people killed and eight injured after a gas pipeline exploded today in Chittagong, Bangladesh: Reuters

வங்காள தேசத்தில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலி

வங்காள தேசத்தில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலி
வங்காள தேசத்தில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலியாகினர்.
டாக்கா ,

வங்காள தேசத்தில் துறைமுக நகரமான சிட்டகாங்கில்  ஐந்து மாடி கட்டிடத்தின் முன் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் 7 பேர் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி அமீர் ஹொசைன் கூறியதாவது:-

எரிவாயு குழாய் வெடிப்புக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

தவறான எரிவாயு குழாய் இணைப்புகள் மற்றும் தரமற்ற சிலிண்டர்களாலும் தெற்காசிய நாட்டில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கியது
வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை இந்தியா வழங்கி உள்ளது.
2. வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம்
வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம் அடைந்தார்.
3. வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. வங்காளதேசத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
வங்காளதேசத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியாகினர்.