உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நலமுடன் இருக்கிறார் - வெள்ளை மாளிகை தகவல் + "||" + US President Trump Is Good - White House Information

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நலமுடன் இருக்கிறார் - வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நலமுடன் இருக்கிறார் - வெள்ளை மாளிகை தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நலமுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.


இந்த நிலையில், 73 வயதான டிரம்ப், நேற்று முன்தினம் மேரிலேண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவரது உடல் பரிசோதிக்கப்பட்டது. திட்டமிடப்படாமல் திடீரென நடந்த இந்த முழு உடல் பரிசோதனை குறித்த தகவல் வேகமாக பரவியது.

இதையடுத்து, ஜனாதிபதி டிரம்ப் சிறப்பான உடல் ஆரோக்கியத்தோடு நலமுடன் இருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்தது. இது வழக்கமான நடைமுறையே என்றும் தேர்தல் பிரசாரத்துக்காக பல்வேறு நகரங்களுக்கு செல்ல இருப்பதால், டிரம்ப் முன்கூட்டியே உடல் பரிசோதனையை முடித்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பை எதிர்த்து கோடீசுவரர் போட்டி?
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து அந்த நாட்டின் பெரும் கோடீசுவரர்களில் ஒருவரான மைக்கேல் புளூம்பெர்க் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
2. பதவி நீக்க விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் டிரம்ப் கணிப்பு
தன் மீதான பதவி நீக்க விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் சென்று முடிவடையும் என டிரம்ப் கணித்துள்ளார்.
3. பேச்சு வார்த்தையை டிரம்ப் முறித்த நிலையில் அமெரிக்க தூதருடன் தலீபான்கள் சந்திப்பு
பேச்சு வார்த்தையை டிரம்ப் முறித்த நிலையில், அமெரிக்க தூதரை தலீபான்கள் சந்தித்தனர்.
4. காஷ்மீர் விவகாரம்: பத்திரிகையாளர் கேள்விக்கு இம்ரான்கானை கிண்டல் செய்த டொனால்ட் டிரம்ப்
காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கோபத்திற்குப் 'இது போன்ற நிருபர்களை நீங்கள் எங்கே கண்டு பிடித்தீர்கள்?'என்று டொனால்ட் டிரம்ப் இம்ரான்கானை கேலி செய்தார்.
5. “சந்தித்து பேசலாம் வாருங்கள்” - டிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு
சந்தித்து பேசலாம் வாருங்கள் என டிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.