உலக செய்திகள்

மேல் படிப்பு :2018-19ல் சீனாவிற்கு அடுத்தப்படியாக அதிகம் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள் + "||" + India sent over 202k students to U.S. in 2018-19, second largest after China: report

மேல் படிப்பு :2018-19ல் சீனாவிற்கு அடுத்தப்படியாக அதிகம் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள்

மேல் படிப்பு :2018-19ல் சீனாவிற்கு அடுத்தப்படியாக அதிகம் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள்
2018-19ல் 2 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் மேல் படிப்பு படிக்க அமெரிக்கா சென்று உள்ளனர். இது சீனாவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.
வாஷிங்டன்,

2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து  202,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமெரிக்காவிற்கு மேல் படிப்பு படிக்க சென்று உள்ளனர். இதில் சீனா முதல் இடத்தில் உள்ளது என  அமெரிக்காவின் 2019 சர்வதேச கல்வி பரிமாற்றம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் 2019 சர்வதேச கல்வி பரிமாற்றம் குறித்த அறிக்கையில்  கூறி இருப்பதாவது:-

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 2018-19 கல்வியாண்டில் உயர்ந்து உள்ளது. இது தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக 10 லட்சத்திற்கும் அதிகமான சர்வதேச மாணவர்களைக் கொண்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகத் துறையின் தரவுகள், 2018 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 44.7 பில்லியன் டாலர் பங்களித்ததாகக் கூறி உள்ளது.  இது முந்தைய ஆண்டை விட 5.5 சதவீதம்  அதிகமாகும்.

அமெரிக்காவில் மொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 1,095,299 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.05 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க உயர்கல்வி மாணவர்கள் தொகையில் 5.5 சதவீதம் பேர் சர்வதேச மாணவர்களாக உள்ளனர்.

தொடர்ச்சியாக பத்தாவது ஆண்டாக, சீனா 2018-19ல் 3,69,548 மாணவர்களுடன் அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களின் மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகிறது. இது 2017-18 ஆண்டை விட  1.7 சதவீதம் அதிகமாகும்.   202,014 மாணவர்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது இது கடந்த ஆண்டைவிட 2 . 9 சதவீதம் அதிகமாகும்.  சீனா, இந்தியா, தென் கொரியா (52,250), சவுதி அரேபியா ( 37,080), கனடா( 26122) ஆகிய 5 நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

வளர்ந்து வரும் சந்தை நாடுகள் சில வலுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளன. குறிப்பாக வங்காள தேசம் 10 சதவீதம் அதிகம்.  பிரேசில் 9.8 சதவீதம் அதிகம், நைஜீரியா 5.8 சதவீதம் அதிகம் மற்றும் பாகிஸ்தான் 5.6 சதவீதம் அதிகமாகும்.

2018-19 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் 51.6 சதவீதம் பேர்  ஸ்டெம் (STEM) துறைகளைப் தேர்ந்து எடுத்தனர். மேலும்  கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறைகளில்  சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 9.4 சதவீதம்  அதிகரித்து உள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கான மிகப்பெரிய கல்வித் துறையாக பொறியியல் இருந்தது, அனைத்து சர்வதேச மாணவர்களில் 21.1 சதவீதம் பேர் அதை தேர்ந்து எடுத்தனர்.

2018-19 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் முதன்முறையாக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 0.9 சதவீதமாக  குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் சரிவுகளிலிருந்து மீண்டு வருகிறது.

2017-18 கல்வியாண்டில், 341,751 அமெரிக்க மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகிறார்கள். இது முந்தைய ஆண்டை விட 2.7 சதவீதம்  அதிகரிப்பு. இங்கிலாந்து,  இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய வெளிநாடுகளில் அதிகமான அமெரிக்க  மாணவர்கள் ஆய்வுகளை நடத்தியுள்ளனர் என அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மணவர்களில்  50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து வளர்ச்சியைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான உதவி மாநில செயலாளர் மேரி ராய்ஸ் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து
அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
2. உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி
உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.
3. பெய்ரூட் வெடிவிபத்து: வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும்- டொனால்டு டிரம்ப் சந்தேகம்
பெய்ரூட் வெடிவிபத்து வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
4. ஹெச்1பி விசாதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது
5. ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்புக்கு அமெரிக்கா கண்டனம்
ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.