உலக செய்திகள்

கலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி + "||" + Shooting at a dinner party in California: 4 killed

கலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

கலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
கலிபோர்னியாவில் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.
சாக்ரமெண்டோ,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரெஸ்னோ என்ற நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை பலர் விருந்து நிகழ்ச்சிக்காக கூடியிருந்தனர்.

அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அலறியடித்து ஓடத் துவங்கினர். 

தொடர்ந்து அந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த இரு நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளதாக பிரெஸ்னோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் போலீசார் 2 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
2. புர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 20 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
3. அமெரிக்காவில் போராட்டகளத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி
அமெரிக்காவில் போராட்ட களத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகினர்.
4. ஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் சாவு - மற்றொரு தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். மற்றொரு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
5. கலிபோர்னியாவில் 1,436 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு
கலிபோர்னியாவில் 1,436 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.