உலக செய்திகள்

பாகிஸ்தானில் சட்ட விரோதமாக நுழைந்ததாக 2 இந்தியர்கள் கைது + "||" + 2 Indians arrested for illegally entering Pakistan

பாகிஸ்தானில் சட்ட விரோதமாக நுழைந்ததாக 2 இந்தியர்கள் கைது

பாகிஸ்தானில் சட்ட விரோதமாக நுழைந்ததாக 2 இந்தியர்கள் கைது
பாகிஸ்தானில் சட்ட விரோதமாக நுழைந்ததாக 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
லாகூர்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட பகவல்பூரில் நேற்று அந்த நாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இந்தியர்கள் இருவர் தங்கியிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.


அவர்களில் ஒருவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் என்றும், மற்றொருவர் தெலுங்கானாவை சேர்ந்த தரிலால் என்றும் தெரியவந்துள்ளது. அவர்கள் எதற்காக பாகிஸ்தானுக்கு வந்தனர் என விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் என்ஜினீயர் என கூறப்படுகிறது. மேலும் அவர் பயங்கரவாத தாக்குதலுக்காக வந்திருக்கலாம் என பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக இந்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம்
பாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,28,474 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,28,474 ஆக உயர்ந்துள்ளது.
3. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,21,896 ஆக உயர்ந்துள்ளது.
5. கராச்சி தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா உள்ளது- இம்ரான் கான் சொல்கிறார்
கராச்சி தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.