ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம்: போராட்டக்காரர்கள் போலீசாரால் சுற்றிவளைப்பு - 100 பேர் கைது


ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம்: போராட்டக்காரர்கள் போலீசாரால் சுற்றிவளைப்பு - 100 பேர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2019 9:30 PM GMT (Updated: 18 Nov 2019 8:21 PM GMT)

ஹாங்காங்கில் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.


* ஹாங்காங்கில் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தை போலீசார் சுற்றிவளைத்ததை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பலர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை ரப்பர் குண்டுகளால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மடக்கி பிடித்து கைது செய்தனர். சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்கள் தலைநகர் பாக்தாத்தில் உள்ள முக்கிய மேம்பாலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

* பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் குர்ராம் திரிபால் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் 4 ராணுவவீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

* நெதர்லாந்து நாட்டின் ராணி மேக்சிமா, வருகிற 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 3 நாள் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் வருகிறார். இந்த பயணத்தின் போது அவர் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான்கான் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.


Next Story