உலக செய்திகள்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் + "||" + 2 professors in drug production at the University of the United States

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள்
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்காடெல்பியா ஹெண்டர்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் டெர்ரி டேவிட் பேட்மேன் (வயது 45) மற்றும் பிராட்லி ஆலன் ரோலண்ட் (40).


இவர்கள் இருவரும் இணைந்து, பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதைப்பொருளை தயாரித்தனர். பல்கலைக்கழகத்தின் அறிவியல் மையத்தில் ரசாயன நெடி ஏற்பட்டதை தொடர்ந்து, நடத்திய விசாரணையில் பேராசிரியர்கள் இருவரும் போதைப்பொருள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் பல்கலைக் கழக நிர்வாகம் கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பேட்மேன் மற்றும் ரோலண்ட் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தலா 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அமெரிக்க சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள்
அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
4. அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்: 8 பேர் பலி
அமெரிக்காவை தாக்கிய புயல் காரணமாக 8 பேர் பலியாகினர்.
5. அமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் ஈரானை சேர்ந்தவர் கைது
அமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் நின்ற ஈரானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.