உலக செய்திகள்

தீவிரவாத தாக்குதலில் 24 மாலி வீரர்கள் பலி + "||" + Malian servicemen patrol party attacked; 24 killed, 29 injured: Malian Military

தீவிரவாத தாக்குதலில் 24 மாலி வீரர்கள் பலி

தீவிரவாத தாக்குதலில் 24 மாலி வீரர்கள் பலி
தீவிரவாத தாக்குதலில் 24 மாலி வீரர்கள் பலியாகி உள்ளனர்.
பமகோ,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் தீவிரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.  உள்ளூர் தீவிரவாத குழுக்களை கட்டுப்படுத்த அவர்களுக்கு எதிராக அரசு படைகள் போராடி வருகின்றன.  இதனால் மாலி, நைஜர் மற்றும் பர்கினா பசோ நாடுகளில் நிலைத்தன்மை அற்ற சூழ்நிலையானது காணப்படுகிறது.

இதனை அடுத்து தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக மாலி மற்றும் நைஜர் நாடுகளின் படைகள் இணைந்து டோங்கோ டோங்கோ என்ற பெயரில் அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.  இதற்கு பதிலடி தாக்குதலும் நடத்தப்பட்டது.

இதில், மாலி நாட்டு படையை சேர்ந்த 24 வீரர்கள் பலியாகி உள்ளனர்.  29 பேர் காயமடைந்தனர்.  இதேபோன்று தீவிரவாதிகள் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர்.  சந்தேகத்திற்குரிய வகையிலான நூற்றுக்கணக்கானோரை நைஜர் படைகள் திலோவா நகரில் வைத்து கைது செய்தன.  இந்த தாக்குதலில் 70 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.  எனினும் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத குழு பற்றிய தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ‘என்னை இனவெறியுடன் அழைத்த வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ - டேரன் சேமி ஆதங்கம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில், என்னை இனவெறியுடன் அழைத்த வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டேரன் சேமி தெரிவித்துள்ளார்.
2. கிரிக்கெட் களத்தில் வீரர்கள், நடுவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஐ.சி.சி.
கிரிக்கெட் களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது.
3. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ராணுவ உயரதிகாரி உள்பட 4 வீரர்கள் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ உயரதிகாரி உள்பட 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.