பிரேசில்: 11 ஆண்டுகளில் மிக அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ள அமேசான் காடுகள்


பிரேசில்: 11 ஆண்டுகளில் மிக அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ள அமேசான் காடுகள்
x
தினத்தந்தி 20 Nov 2019 5:55 AM GMT (Updated: 20 Nov 2019 5:55 AM GMT)

அமேசான் காடுகள் கடந்த 11 ஆண்டுகளில் மிக அதிக அளவில் அழிக்கப்பட்டுள்ளதாக பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரேசில்,

பிரேசில் நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமேசான் காடுகள் அழிக்கப்படும் விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 11 ஆண்டுகளில் மிக அதிக அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

அமேசான் காடுகளில் இந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயின் விளைவாக பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. செயற்கைகோள் புகைப்படங்கள் மூலமாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, அமேசான் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அமேசான் காடுகளை பாதுகாக்க ஜி7 உச்சிமாநாட்டின் போது வழங்கப்பட்ட 20 மில்லியன் டாலர்களை போல்சனாரோ ஏற்க மறுத்துவிட்டார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமேசான் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் உதவ தயாராக இருப்பதாக கூறினார். இருப்பினும் இந்த விஷயத்தில் பிரேசில் அரசாங்கத்திற்கு எந்த உதவியும் தேவையில்லை என்று போல்சனாரோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story