இறப்புகள் குறைந்தாலும் பயங்கரவாதத்தால் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன-உலகளாவிய பயங்கரவாத அட்டவணை


இறப்புகள் குறைந்தாலும் பயங்கரவாதத்தால் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன-உலகளாவிய பயங்கரவாத அட்டவணை
x
தினத்தந்தி 22 Nov 2019 7:22 AM GMT (Updated: 22 Nov 2019 9:21 AM GMT)

இறப்புகள் குறைந்தாலும் பயங்கரவாதத்தால் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன என 2019 உலகளாவிய பயங்கரவாத அட்டவணை குறிப்பிட்டு உள்ளது.

பாரிஸ் 

தீவிரவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில் பயங்கரவாதத்தால் உலகளாவிய இறப்புகளின் எண்ணிக்கை 2018 ல் 15.2 சதவீதம் குறைந்து உள்ளது என   சிட்னியை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (IEP)வெளியிட்ட 2019 உலகளாவிய பயங்கரவாத அட்டவணை சுட்டிக்காட்டி உள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ) செயல்பட்டபோது  மத்திய கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். 2014 ல் 33,555 இறப்புகளில் இருந்து. இது 2018 ஆம் ஆண்டில் 15982 ஆக குறைந்து உள்ளது.

உலகின் மிக பயங்கர பயங்கரவாதக் குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ்-க்குப் பின் தலீபான் முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானில்  1,443 தாக்குதல்களில் 7,379 பேர்  கொல்லப்பட்டனர்.  ஈராக்கில் 1,131 தாக்குதல்களில்  1,054 பேர் கொல்லப்பட்டனர், நைஜீரியாவில்  562 தாக்குதல்களில்  2,040 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 131 சம்பவங்களில்  662 பேரை கொன்ற   சிரியா நான்காவது இடத்தில் உள்ளது.

2018 இல் பெரிய பயங்கரவாத தாக்குதல் எதுவும் பதிவு செய்யப்படாத ஐரோப்பாவில், இறப்புகளின் எண்ணிக்கை 2017 ல் 200  ஆக இருந்து 62 ஆக குறைந்து உள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அழிப்பு  என்பதே மேற்கு ஐரோப்பாவில்  2012 முதல் அதன் மிகக் குறைந்த பயங்கரவாத சம்பவங்கள்  பதிவாக காரணமாகும்.

2018 ஆம் ஆண்டில், 71 நாடுகள் குறைந்தது ஒரு பயங்கரவாதம் தொடர்பான மரணத்தை சந்தித்தன, இது நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கையாக உள்ளன.

இதற்கிடையில், மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியாவில் தீவிர வலதுசாரி பயங்கரவாதத்தால் ஏற்பட்ட இறப்புகள் அதிகமாகி உள்ளது.  கடந்த ஐந்து ஆண்டுகளில் இறப்புகளின் எண்ணிக்கை 320 சதவீதம் அதிகரித்துள்ளது. நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகள் மீதான மார்ச் மாத தாக்குதல்கள் இதை காட்டுகிறது.  இங்கு  நடைபெற்ற தாக்குதல்களில் 51 பேர் பலியானார்கள். தீவிரவாத வலதுசாரி சித்தாந்தம் "பயங்கரவாத நடவடிக்கைகளின் முந்தைய வரலாறு இல்லாத" ஒரு நாட்டிற்கு பரவி உள்ளது.

அமெரிக்காவில், தீவிர வலதுசாரி பயங்கரவாதத்தின் அதிகரிப்பு என்பது வெறுப்புக் குற்றங்களின் அதிகரிப்பால் பிரதிபலிக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.

Next Story