சீனாவுடனான வா்த்தக வழித்தடம் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


சீனாவுடனான வா்த்தக வழித்தடம் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Nov 2019 5:55 PM GMT (Updated: 22 Nov 2019 5:55 PM GMT)

சீனாவுடனான வா்த்தக வழித்தடம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவுடனான வா்த்தக வழித்தடம் பாகிஸ்தானுக்கு நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலுசிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரை சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கு அமெரிக்கா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் தெற்காசிய விவகாரத்துறை துணை செயலாளர் அலைஸ் வெல்ஸ் பேசியபோது, “பொருளாதார வழித்தடத்தால் சீனாவுக்குதான் அதிக லாபம் என்றார். மேலும் இந்தத் திட்டத்தால் பாகிஸ்தான் பொருளாதாரம் நீண்ட கால பாதிப்பை சந்திக்கும் என்று கூறிய அவர்,  கோடிக்கணக்கான டாலா்கள் முதலீடு செய்து வழித்தடத்தை பாகிஸ்தானில் சீனா அமைத்தாலும் கட்டுமானப் பணிகளுக்கு தனது சொந்த நிறுவனங்களையும், தொழிலாளா்களையும் மட்டுமே அனுப்பி வைப்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பாகிஸ்தானில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும்போது, அந்த நாட்டுப்  பணியாளா்களை வேலைக்கு அமா்த்தாமல் சீனா தங்கள்  தொழிலாளா்களுக்கே அந்த வாய்ப்புகள் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story