இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 23 Nov 2019 2:15 PM GMT (Updated: 23 Nov 2019 2:15 PM GMT)

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.

ஜகார்தா, 

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பபுவா  பிராந்தியத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

பசுபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம் என்று சொல்லப்படும் இடத்தில் இந்தோனேசியா தீவு அமைந்துள்ளதால், அங்கு  நிலநடுக்கம் ஏற்படுவது சர்வ சாதாரண நிகழ்வாக உணரப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், அந்த நாட்டில் சுனாமி ஏற்பட்டது. இந்தியா உள்பட 12 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த சுனாமிக்கு சுமார் 2,30,000 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். 

Next Story