உலக செய்திகள்

அல்பேனியாவில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு + "||" + Albania earthquake; Death toll reaches 40

அல்பேனியாவில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

அல்பேனியாவில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
டிரானா,

அல்பேனியா நாட்டின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் இருந்து சுமார் 29 கி.மீ. தூரத்தில் உள்ள ஷிஜாக் என்ற இடத்திற்கு அருகில், 20 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 45 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 650 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அல்பேனியா நாட்டில் இன்று அல்பேனியா கொடியின் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்றைய கொண்டாட்டங்களை அல்பேனியா பிரதமர் எடி ரமா ரத்து செய்து, துக்க நாளாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்
ஆந்திராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
2. லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
லடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.
3. உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
உத்தரகாண்டில் சமோலி பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. நியுசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
நியுசிலாந்து ரவுல் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. அலாஸ்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.