உலக செய்திகள்

நமீபியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஹாகே கெயிங்கோப் மீண்டும் வெற்றி + "||" + Namibia's President Hage Geingob wins re-election

நமீபியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஹாகே கெயிங்கோப் மீண்டும் வெற்றி

நமீபியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஹாகே கெயிங்கோப் மீண்டும் வெற்றி
தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹாகே கெயிங்கோப் மீண்டும் வெற்றி பெற்றார்.

* லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.

* சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹசாகா மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க வான்தாக்குதல் நடத்தியது. இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


* தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹாகே கெயிங்கோப் மீண்டும் வெற்றி பெற்றார். மேலும் அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலிலும் ஹாகே கெயிங்கோப்பின் கட்சி வெற்றி பெற்றது.

* இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி பாலஸ்தீனத்தை சேர்ந்த 3 வாலிபர்களை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரையும் பாதுகாப்புபடையினர் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

* ஹாங்காங் போராட்டத்தில் அதிகப்படியான போலீஸ் படை பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மிச்செல்லே பேஷலெட் கூறினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, மிச்செல்லே பேஷலெட் பொருத்தமற்ற முறையில் தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டி உள்ளது.