ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி


ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி
x
தினத்தந்தி 2 Dec 2019 9:49 PM GMT (Updated: 2 Dec 2019 9:49 PM GMT)

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பஸ் கவிழ்ந்த கோர விபத்து சிக்கி 26 பேர் பலியாகினர்.


* ஈராக்கின் நஜாப் நகரில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகத்துக்கு போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் மீண்டும் தீவைத்தனர். கடந்த வியாழக்கிழமை இந்த தூதரகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 40-க்கும் அதிகமானோர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

* ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் துனிசில் இருந்து அயின் தரஹாம் நகருக்கு சுமார் 50 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற பஸ், வளைவான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோரவிபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ஈரானில் இருந்து வரும் அச்சுறுத்தல் குறித்தும், பிராந்திய பிரச்சினைகள் பற்றியும் இரு நாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்தினர்.

* மியான்மர் நாட்டில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 11 மாதத்தில் மட்டும் 123 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

* ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டதால் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தடைப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story