ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் - 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தகவல்


ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் - 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2019 9:42 PM GMT (Updated: 3 Dec 2019 9:42 PM GMT)

ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தெரிவித்துள்ளது.


* இங்கிலாந்தின் எசெக்ஸ் நகரில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார், பள்ளிமாணவர்களின் கூட்டத்துக்குள் புகுந்ததில் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். மேலும் 3 சிறுவர்கள், ஒரு சிறுமி மற்றும் 53 வயதான பெண் ஒருவர் என 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய 51 வயதான கார் டிரைவரை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* பிரேசிலில் அதிபர் ஜெயீர் போல்சனரோ மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக வாலிபர் ஒருவரை அந்த நாட்டு சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* கஜகஸ்தான் நாட்டின் கைசைலோர்டா நகரில் இருந்து கும்கோல் நகருக்கு 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் 208 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்பு சபையான ‘அம்னெஸ்டி’ தெரிவித்துள்ளது.

Next Story