உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி + "||" + Former Pakistan President Musharraf hospitalised in Dubai

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துபாய்,

பாகிஸ்தானில் கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷாரப் (வயது 76). இவர் கடந்த 2007-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்பு சட்டத்தை அவர் முடக்கிவைத்தார். இது பெரும் எதிர்ப்புக்கு வழி வகுத்தது.


இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 2016-ம் ஆண்டு, மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறப்போவதாக கூறி முஷாரப் துபாய்க்கு சென்றார். பின்னர் அவர் நாடு திரும்பவே இல்லை.

இந்த நிலையில், சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பை வரும் 28-ந்தேதி வெளியிடுவதாக அந்த கோர்ட்டு அறிவித்தது.

இதனை எதிர்த்து, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கின் தீர்ப்பை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் முஷாரப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருதய பிரச்சினை மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாக அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசத்துரோக வழக்கில் முஷாரப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் சிறை விதிக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
2. பாகிஸ்தான் வாருங்கள்; கோத்தபய ராஜபக்சேவுக்கு பாக்.அதிபர் ஆரிப் அல்வி அழைப்பு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பாகிஸ்தானுக்கு வருமாறு அந்நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி அழைப்பு விடுத்துள்ளார்.
3. பாகிஸ்தான் 302 ரன்களில் ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ - யாசிர் ஷா சதம் அடித்தார்
அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்- இரவு டெஸ்டில் பாகிஸ்தான் அணி 302 ரன்களுக்கு ஆட்டம் இழந்து பாலோ-ஆன் ஆனது. யாசிர் ஷா சதம் அடித்து வியக்க வைத்தார்.
4. பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் வார்னர், லபுஸ்சேன் சதம் - ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், லபுஸ்சேன் சதம் அடித்தனர்.
5. பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் - இந்திய வீரர்கள் ராம்குமார், நாகல் வெற்றி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ராம்குமார், சுமித் நாகல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.