உலக செய்திகள்

சூடான் தொழிற்சாலை விபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி + "||" + Explosion at Sudan factory kills 23

சூடான் தொழிற்சாலை விபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி

சூடான் தொழிற்சாலை விபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி
சூடானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் பலி ஆனார்கள்.
கார்டூம்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தலைநகர் கார்டூமின் புறநகர் பகுதியான பாக்ரியில் இயங்கி வரும் பீங்கான் ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் இந்தியர்கள் 68 பேர் வேலை பார்த்து வந்தனர்.


இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல பணிகள் நடந்து கொண்டிருந்தது. அங்கே மிகப்பெரிய டேங்கரில் வைக்கப்பட்டிருந்த திரவ பெட்ரோலிய கியாசை சிறு சிறு சிலிண்டர்களில் மாற்றும் பணிகளில் இந்தியர்கள் உள்பட சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த கியாஸ் டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதன் அருகில் தீப்பிடிக்கும் பொருட்கள் ஏராளம் குவித்து வைக்கப்பட்டிருந்ததால், அவற்றிலும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் ஆலை முழுவதும் பல அடி உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பயங்கர சம்பவத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 23 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் 18 பேர் இந்தியர்கள் ஆவர்.

பலியான இந்தியர்களில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 25) ஆவார். மற்றொ ருவர் கடலூர் மாவட்டம் அருகே உள்ள மானடிக்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் (35).

மேலும் 130-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதில் 7 பேர் இந்தியர்கள் எனவும், அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இந்திய தூதரக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்த விவரங்களை சேகரித்த னர். பின்னர் விபத்து ஏற்பட்ட ஆலையில் சிக்கியிருந்த இந்தியர்கள் 34 பேரை அதிகாரிகளின் உதவியுடன் மீட்டு ஆலையின் விடுதியில் தங்க வைத்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்து கொள்ள 24 மணி நேர தொடர்பு எண்ணை (+249-921917471) இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி இருப்பதால், உடல்களை கண்டறிவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக தூதரகம் தெரிவித்து உள்ளது.

சூடான் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த இந்தியர்களுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில், ‘சூடான் தலைநகர் கார்டூமின் பாக்ரியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் நிகழ்ந்த மிகப்பெரும் வெடிவிபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து அறிந்தேன். இந்த கோர விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. சூடானில் பயங்கர குண்டுவெடிப்பு: 7 பேர் உடல் சிதறி பலி
சூடானில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி 7 பேர் உடல் சிதறி பலியாயினர்.
2. சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது : நீதிபதிகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு
சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த சிறுவர்கள், நீதிபதிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
3. சூடானில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரண தண்டனை
சூடானில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
4. டெல்லியில் இன்று அதிகாலையில் தீவிபத்து
டெல்லியின் முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
5. வங்காளதேசத்தில் பிளாஸ்டிக் ஆலையில் தீவிபத்து: 13 பேர் பலி
வங்காளதேசத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் பலியாகினர்.