உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜப்பான் மருத்துவர் உள்பட 7 பேர் பலி + "||" + Afganistan: Japanese doctor gunned down in attack in Nangarhar

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜப்பான் மருத்துவர் உள்பட 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜப்பான் மருத்துவர் உள்பட 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் உள்பட 7 பேர் பலியாகினர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் இன்று பயங்கரவாதிகள் சிலர் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

அந்த வாகனத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் உள்பட 7 பேர் சென்று கொண்டிருந்தனர். இந்த தாக்குதலில் அந்த வாகனத்தில் இருந்த 7 பேரும் பலியாகினர்.

தாக்குதல் நடத்திய நபர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுபேற்கவில்லை. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பலியான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் டெட்சு நகாமுரா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இவருக்கு கவுரவ ஆப்கான் குடியுரிமை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.
3. ஆப்கானிஸ்தானில் ராணுவத்திடம் சரணடைந்த 59 தலிபான் பயங்கரவாதிகள்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 59 பேர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு ராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.
4. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பிடியில் இருந்த 62 ராணுவ அதிகாரிகள் விடுவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பிடியில் இருந்த ராணுவ அதிகாரிகள் 62 பேர் சிறையை உடைத்து மீட்கப்பட்டனர்.
5. ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது
ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.