உலக செய்திகள்

அமெரிக்காவில் திருடர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி + "||" + 4 dead after UPS truck police chase ends in highway shootout in South Florida

அமெரிக்காவில் திருடர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவில் திருடர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
அமெரிக்காவில் திருடர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு திருடர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று சில திருடர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல்துறையினர் கோரல் கேபில்ஸ் பகுதியில் உள்ள அந்த நகைக்கடைக்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வருவதை அறிந்து கொண்ட திருடர்கள், ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தின் வாகனத்தை வழிமறித்து, ஓட்டுனரை பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

காவல்துறையினர் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து திருடர்களை துரத்திச் சென்றனர். அந்த வாகனம் ப்ரோவார்டு பகுதிக்கு வந்த போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.

அப்போது காவல்துறையினரை நோக்கி திருடர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காவலர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் அந்த இடத்தில் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு திருடர்கள், வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் பொது மக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தில் நகைக்கடை ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 20 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
2. அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து
அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
3. உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி
உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.
4. பெய்ரூட் வெடிவிபத்து: வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும்- டொனால்டு டிரம்ப் சந்தேகம்
பெய்ரூட் வெடிவிபத்து வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
5. ஹெச்1பி விசாதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது