உலக செய்திகள்

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 3 வீரர்கள் பலி + "||" + US: 3 soldiers killed after Black Hawk helicopter crashes in Minnesota

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 3 வீரர்கள் பலி

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 3 வீரர்கள் பலி
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியில் அந்நாட்டு ராணுவத்திற்கு சொந்தமான யு.என் - 60 பிளாக் ஹாக் ரக ஒன்று நேற்று சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் மூன்று ராணுவ வீரர்கள் இருந்தனர்.

இந்த நிலையில்,  தரைக் கட்டுப்பாட்டு தளத்துடனான தனது தொடர்பை ஹெலிகாப்டர் இழந்தது. 

இதையடுத்து, மின்னிபோலிஸ் நகரிலிருந்து 95 கி.மீ தொலைவில் உள்ள செயின்ட் கிளவுடு பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து  நொறுங்கிக் கிடந்தது தெரியவந்தது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.   

‘மின்னசோட்டா தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தாருக்கும் நமக்கும் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என மின்னசோட்டா தேசிய பாதுகாப்புப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது
அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தாகி உள்ளது.
2. அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்: 8 பேர் பலி
அமெரிக்காவை தாக்கிய புயல் காரணமாக 8 பேர் பலியாகினர்.
3. அமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் ஈரானை சேர்ந்தவர் கைது
அமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் நின்ற ஈரானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
4. ஈரான் விவகாரம் ; டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்
ஈரான் மீது போர் தொடுக்கும் விவகாரத்தில் டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
5. ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் -நான்சி பெலோசி
ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என்று அமெரிக்க சபாநாயகர் நான்சி கூறி உள்ளார்.