உலக செய்திகள்

ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாப சாவு - 30 பேர் படுகாயம் + "||" + 11 killed in Iran wedding ceremony - 30 people injured

ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாப சாவு - 30 பேர் படுகாயம்

ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாப சாவு - 30 பேர் படுகாயம்
ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
டெஹ்ரான்,

ஈரான் நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகேஸ் நகரில் நேற்று திருமண விழா ஒன்று நடந்தது. இதற்காக மணமக்களின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்த வேளையில், திடீரென அங்கிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அங்கு வந்திருந்த உறவினர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் பலத்த தீக்காயம் அடைந்திருப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


ஆனந்தமாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் மணமக்களுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட பத்து மடங்கு அதிகமாக உள்ளது.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட பத்து மடங்கு அதிகமாகும் என ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு தெரிவித்து உள்ளது.
2. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கிறது-மைக் பாம்பியோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.
3. உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 விநாடிகள் இடைவெளியில் 2 ஏவுகணைகளால் தாக்கிய ஈரான்
உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 விநாடிகள் இடைவெளியில் இரு ஏவுகணைகளால் ஈரான் தாக்கியது தெரியவந்துள்ளது.
4. ஈரான், உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவாளர் - அமெரிக்க வெளியுறவு மந்திரி சாடல்
உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவாளராக ஈரான் விளங்குகிறது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
5. ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா
ஈரானின் 4 சரக்கு கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.