மெக்சிகோ நாட்டில் நடந்த வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 10 பேர் படுகாயம்


மெக்சிகோ நாட்டில் நடந்த வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:00 PM GMT (Updated: 7 Dec 2019 9:45 PM GMT)

மெக்சிகோ நாட்டில் பியூஹ்லா நகரில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.


* கிரீஸ் நாட்டில் 2008-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி ஏதென்ஸ் நகரில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் அலெக்சாண்டிராஸ் என்ற வாலிபர் கொல்லப்பட்டதின் நினைவுநாள் அங்கு நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட பேரணிகளில் வன்முறை வெடித்தது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

* ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுகிற விதத்தில், தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 3 மாதங்களுக்கு முன் நிறுத்தினார். இப்போது டோஹாவில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* அணு ஆயுதங்களை முற்றிலும் கைவிடுவது தொடர்பாக வட கொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

* மெக்சிகோ நாட்டில் பியூஹ்லா நகரில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

* 2021-ம் ஆண்டு அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா வழங்குவதற்கு மின்னணு பதிவு செயல்முறை அமல்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளை அமெரிக்கா நிறைவு செய்துள்ளது. இந்தியாவில் ஐ.டி. என்னும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த விசாவுக்கான மனுக்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


Next Story