நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு: ஒருவர் பலி; சுற்றுலா பயணிகள் பலர் காயம்


நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு: ஒருவர் பலி; சுற்றுலா பயணிகள் பலர் காயம்
x
தினத்தந்தி 9 Dec 2019 8:31 AM GMT (Updated: 9 Dec 2019 8:31 AM GMT)

நியூசிலாந்தின் வடக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள வெள்ளைத்தீவில் எரிமலை வெடித்தது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்து நாட்டின், கடலோர பகுதியில் அமைந்துள்ளது வெள்ளைத் தீவு. எரிமலைகள் நிரம்பிய இந்த தீவை சுற்றிப்பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் படகுகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த நிலையில், திடீரென எரிமலை வெடித்ததில் 20 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். 

சிகிச்சை பலனளிக்காமல் ஒரு சுற்றுலா பயணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் வந்த படகும் சேதமடைந்த நிலையில், ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், தற்போதைய சூழலில், மீட்பு படையினர்களால் கூட   தீவுக்குள் செல்ல முடியவில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

Next Story