2018ம் ஆண்டில் உலக அளவில் 5 சதவீத ஆயுத விற்பனை அதிகரிப்பு


2018ம் ஆண்டில் உலக அளவில் 5 சதவீத ஆயுத விற்பனை அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2019 11:24 AM GMT (Updated: 9 Dec 2019 11:24 AM GMT)

கடந்த 2018ம் ஆண்டில் உலக அளவில் 5 சதவீத அளவிற்கு ஆயுத விற்பனை அதிகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்,

சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-ல் ஆயுத விற்பனை மூலம் 100 மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் சுமார்  29 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில் 59 சதவீத அளவிலான ஆயுதங்கள் அமெரிக்காவில் தயாரானவை என்றும், 17 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அமெரிக்காவின் இந்த வியாபாரம், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.2 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கடுத்து ரஷ்யா 8.6 சதவீதமும், இங்கிலாந்து 8.4 சதவீதமும்  பிரான்ஸ் 8.4 சதவீதமும் ஆயுதங்களை விற்பனை செய்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீதத்தை  2013 ஆம் ஆண்டு  முதல் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்புக்காக செலவிட்டு வருகிறது.

முதலிடத்தில் உள்ள ரஷ்ய நிறுவனமான அல்மாஸ்-ஆண்டே ரூ.68,000 கோடி   வருவாயுடன் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முந்தைய ஆண்டை விட 18 சதவீத  உயர்வு ஆகும்.

உலகின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனமான அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் 2009 முதல் கடந்த ஆண்டு வரை ரூ.33 லட்சம் கோடி  வருவாயை ஈட்டியுள்ளது. அதன் விற்பனை மட்டுமே உலக சந்தையில் 11 சதவீதம் ஆகும்.

Next Story