உக்ரைன் நாட்டின் கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து - 12 பேர் உடல் கருகி பலி


உக்ரைன் நாட்டின் கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து - 12 பேர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 9 Dec 2019 10:45 PM GMT (Updated: 9 Dec 2019 10:45 PM GMT)

உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் ஒடேசா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாகினர்.


* ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர் தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக ஆப்கானிஸ் தானில் 48 மணி நேரம் சண்டையை நிறுத்திவைப்பது குறித்து இருதரப்புக்கும் இடையே ஒரு வாரத்துக்குள் ஒப்பந்தம் எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

* உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் ஒடேசா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாகினர்.

* ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை பாதுகாப்பு படையினர் சோதனை சாவடி மீது மோதி வெடிக்க செய்தார். இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் பலியாகினர்.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

* பெருநாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 9 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொட்ரோலை திருடி விற்று ஊழல் செய்ததாக மூத்த அதிகாரிகள் உள்பட 27 ராணுவ வீரர்களை அந்த நாட்டு ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story