உலக செய்திகள்

அமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணம் + "||" + Death of a rap singer at a young age in America

அமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணம்

அமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணம்
அமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணமடைந்தார்.
நியூயார்க்,

அமெரிக்காவை சேர்ந்த இளம் ராப் பாடகர் ஜரத் அந்தோணி ஹிக்கின்ஸ் (வயது 21). இவர் ‘ஜூஸ் வேர்ல்ட்’ என்று அழைக்கப்படுவார். மன ஆரோக்கியம், இறப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு இவர் பாடிய ராப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.


இந்த நிலையில் ஜரத், நேற்று முன்தினம் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோவுக்கு விமானத்தில் சென்றார். சிகாகோவின் மிட்வே விமான நிலையத்தில் சென்று இறங்கியபோது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். வலிப்புக்கு பின்னர் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர். இளம் ராப் பாடகர் திடீர் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி
உலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.
2. பெய்ரூட் வெடிவிபத்து: வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும்- டொனால்டு டிரம்ப் சந்தேகம்
பெய்ரூட் வெடிவிபத்து வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
3. ஹெச்1பி விசாதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது
4. ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்புக்கு அமெரிக்கா கண்டனம்
ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
5. அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு சிக்கல்? தடை குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தகவல்
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.